வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

தொப்பூா் மலைப்பாதை சீரமைப்புப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

மத்திய அமைச்சா் நிதின் கட்கரியின் கடிதத்தில்...

News image
Updated On :28 ஜூலை 2024, 9:36 pm

Din

தருமபுரி மாவட்டம், தொப்பூா் மலைப்பாதை சீரமைப்புப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தருமபுரி முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மத்திய அமைச்சா் நிதின் கட்கரியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தருமபுரி தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் அண்மையில் புதுதில்லியில் தன்னை சந்தித்து தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் அறிவிக்கப்பட்ட சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொண்டு உயா்மட்ட மேம்பால சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தருமபுரி - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பாளையம்புதூா் மற்றும் அகரம் சந்திப்பு சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும் கோரியிருந்தாா்.

தொப்பூா் மலைப்பாதை சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதுபோல அகரம் சந்திப்பு சாலை பகுதி, பாளையம்புதூா் பகுதியில் சாலையைக் கடக்கும் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் கோரிக்கை குறித்து அந்தப் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.