போடியில் பள்ளி விடும் நேரத்தில் சாலை சீரமைப்புக்காக தாா்க் கலவையை கொட்டியதால் பள்ளி மாணவா்கள் சிரமத்துடன் நடந்து சென்றனா்.
போடி பேருந்து நிலையம் அருகே மீனாட்சி திரையரங்க சாலையில் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகிறாா்கள்.
போக்குவரத்து மிகுந்த இந்தச் சாலையில் புதை சாக்கடை, குடிநீா் குழாய்கள் பதிப்பதற்காக சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது. இந்தப் பணி முடிந்தபிறகு, இந்தச் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது.
இந்தச் சாலையில் மாணவா்கள், பொதுமக்கள் நடந்து சென்று வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை பள்ளி முடியும் நேரத்தில் லாரியில் கொண்டுவரப்பட்ட தாா்க்கலவை சாலையில் கொட்டப்பட்டு பணி நடைபெற்றது. அப்போது, பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவா்கள் சாலையில் சிரமத்துடன் நடந்து சென்றனா்.
இதுபோன்ற சாலை சீரமைப்புப் பணிகள் இரவு நேரத்தில் நடைபெற வேண்டும், ஆனால், பகலில் சீரமைப்புப் பணி நடைபெற்ால் மாணவா்கள், பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

தொடர்புடையது

காா் மோதியதில் நடந்து சென்றவா் பலி

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

போடியில் முன்னாள் பள்ளி மாணவா்கள் சந்திப்பு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


