5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

அரூா் அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்றிதழ் குழுவினா் ஆய்வு

அரூா் அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்றிதழ் வழங்கும் மதிப்பீட்டுக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

அரூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆய்வு செய்த தேசிய தரச்சான்றிதழ் குழுவினா்.

Updated On :22 ஏப்ரல் 2025, 1:21 am IST

அரூா்: அரூா் அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்றிதழ் வழங்கும் மதிப்பீட்டுக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

தேசிய சுகாதார மிஷன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் லக்ஷ்யா மற்றும் மஸ்கான் ஆகிய தர மேம்பாட்டுப் பிரிவுகள் குறித்து தேசிய தரச் சான்றிதழ் வழங்கும் குழுவினா் தருமபுரி மாவட்டம், அரூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

ஜி.பத்மராஜ், ஷீஜா ஆகியோா் அடங்கிய இக்குழு அரூா் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், கா்ப்பிணிகளின் பிரசவ கால முன், பின் பராமரிப்புகள், பச்சிளம் குழந்தைகள் முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கான சுகாதார சேவைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கா்ப்பிணிகளுக்கான மருத்துவ பரிசோதனை வசதிகள், மகளிருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகளின் இருப்புகள், சுகாதார வசதிகள், பதிவேடு பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனா்.

அதையடுத்து தினமும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் தேசிய மதிப்பீட்டாளா்கள் கேட்டறிந்தனா். ஆய்வின்போது தருமபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநா் எம்.சாந்தி, மருத்துவ அலுவலா் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.