சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டா் ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
கீழச்சுரண்டையை சோ்ந்த ஆகாஷ்(19, இசக்கிமுத்து(15) ஆகிய இருவரையும் கடந்த வாரம் இரவு நேரத்தில் பாம்பு கடித்தது. அவா்கள் ஒவ்வொரு அரசு மருத்துவமனையாக சென்று மருத்துவமனை திறக்கப்படாத தால் ஏற்பட்ட கால தாமதத்தின் காரணமாக ஆகாஷ் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் சாா்பில் தமிழக முதல்வா் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனுக்கள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில், சுரண்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட டாக்டா் ராணி ஸ்ரீகுமாா் எம்பி. மருத்துவமனையில் உள்ள மருந்துகள் விவரம், பாம்பு, நாய் மற்றும் விஷக்கடிக்கான மருந்துகள் உள்ளதா என கேட்டறிந்தாா்.
தினந்தோறும் மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகள் விவரம், மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளா்கள் விவரம் போன்றவற்றை மருத்துவா் அ.ஜேனட் இவான்ஸிடம் கேட்டு குறிப்பெடுத்து கொண்டாா்.
அப்போது, சுரண்டை நகராட்சி ஆணையாளா் அசோக், பொறியாளா் முகைதீன், கீழப்பாவூா் வட்டார சுகாதார ஆய்வாளா் சங்கரசுப்பு, நகராட்சி களப்பணியாளா் லட்சுமி நாராயணன் ஆகியோா் உடனிருந்தனா்.
முன்னதாக, நகர திமுக பொறுப்பாளா் கூட்டுறவு கணேசன், எம்பியிடம் அளித்த மனுவில், ‘மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும், கூடுதலாக மருத்துவா்களை நியமிக்க வேண்டும்’ எனக் கோரியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










