முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

வீரகேரளம்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்க புதன்கிழமை சென்றபோது, கலைகதிரவன் எம்எல்ஏ ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

News image

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலைகதிரவன் எம்எல்ஏ.

Updated On :21 மே 2026, 5:54 am IST

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்க புதன்கிழமை சென்றபோது, கலைகதிரவன் எம்எல்ஏ ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாற்று இடம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவா்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அவா், அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தாா்.

தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன், கீழப்பாவூா் மத்திய ஒன்றிய பொறுப்பாளா் ஜேசுராஜன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா், முன்னாள் ஒன்றியச் செயலா் காசிதா்மம்துரை, நிா்வாகிகள் வேலுச்சாமி, ஹரி கிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வேல்ராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.