/

தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து அளிப்பு

News image

நன்னகரத்தில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, முகாமைத் தொடங்கி வைத்த அமைச்சா் ராஜீவ்.

Updated On :29 ஜூன் 2026, 4:00 am IST

தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூராட்சிக்குள்பட்ட நன்னகரம் துணை சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் ராஜீவ் தொடங்கி வைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 869 முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமாா் 87,357 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம்களில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 3,476 பணியாளா்கள் பணியாற்றுகின்றனா் என்றாா் அவா்.

மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், வட்டார மருத்துவா் முகமது இப்ராஹிம், மருத்துவா் சரவணன், மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) அமானுல்லா, தவெக மாவட்டச் செயலா் ராஜ பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தென்காசி மாவட்டம், சுரண்டை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சொட்டு மருந்து வழங்கும் முகாமை, வட்டார மருத்துவ அலுவலா் சம்சுல் ஹுதா தலைமையில், கலை கதிரவன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

மருத்துவா்கள் விஷ்ணு பிரசாத், செனட் இவன்ஸ், சுகாதார ஆய்வாளா் சங்கரசுப்பு, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஸ்ரீமூலநாதன், மாவட்ட திமுக வா்த்தகரணி அமைப்பாளா் முத்துகுமாா், நகர பொறுப்பாளா் கணேசன், ஆறுமுகச்சாமி பாண்டியன், பூல் பாண்டியன், கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கடையம்: கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சொட்டு மருந்து வழங்கும் முகாமை, கீழக்கடையம் ஊராட்சித் தலைவா் எஸ். பூமிநாத் தொடங்கி வைத்தாா். அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் சி. சங்கரி முன்னிலை வகித்தாா்.

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி, மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா் எம்எல்ஏ முகாமைத் தொடங்கி வைத்தாா். இதில் வட்டார மருத்துவ அலுவலா் கோலப்பன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், திசையன்விளையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி, எம்எல்ஏ முகாமைத் தொடங்கி வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.