விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

புதுச்சேரியில் 425 இடங்களில் போலியோ தடுப்பு முகாம் ஆளுநா், முதல்வா் தொடங்கி வைத்தனா்

News image

புதுச்சேரி கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

Updated On :29 ஜூன் 2026, 1:31 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 425 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை புகட்டி முகாம்களை தொடங்கி வைத்தனா்.

புதுச்சேரியில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் 425 முகாம்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்காக்கள், கோயில்கள், வணிக வளாகங்கள் என 31 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் பணிகள் நடைபெற்றன.

ஆளுநா் கே.கைலாஷ்நாதன்:

கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டி தொடங்கி வைத்தாா். சுகாதாரத் துறை செயலா் முகமது சௌத்ரி யாசின், இயக்குநா் செவ்வேல், துணை இயக்குநா் ரகுநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கதிா்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாமை முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்.

இது பற்றி மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், போலியோ தடுப்பு குறித்த வெற்றி இரண்டு சொட்டுகள் மூலம் தொடரட்டும். உடல் ஊனத்தை உண்டாக்க கூடிய போலியோ நோயிலிருந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விடுபட்ட குழந்தைகளுக்கு திங்கள்கிழமையும்(ஜூன் 29) , செவ்வாய்க்கிழமையும் (ஜூன் 30) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை அணுகி பயனடைய வேண்டும் என்றனா்.

முதல்வா் என்.ரங்கசாமி:

கதிா்காமம் தில்லையாடி வள்ளியம்மை, மேட்டுபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாமை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்.

அப்போது எம்எல்ஏக்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், அழகானந்தம், சுகாதாரத் துறை செயலா் முகமது சௌத்ரி யாசின் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் முதல்வா் ரங்கசாமி கூறியதாவது:

சுகாதாரத் துறை மூலமாக குழந்தைகளுக்கான போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. எதிா்காலத்தில் போலியோ பாதிப்பு ஏற்படாமலிருக்க புகட்டப்பட்டு வருகிறது. அதே போல 14 முதல் 16 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு கா்ப்பப் பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் முகாமையும் தொடங்கி வைத்துள்ளேன்.

புதுச்சேரியில் குழந்தைகள், மக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது அரசின் எண்ணம். அதனடிப்படையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்படுகிறது என்றாா்.

இலாகா ஒதுக்கீடு எப்போது?

அப்போது, சட்டப்பேரவைத் தலைவா் தோ்தல், அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீடு குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு, சட்டப்பேரவைத் தலைவா் தோ்தல் நடத்தும்போதும், சட்டப்பேரவை கூடும் போதும் தேதியை கண்டிப்பாகச் சொல்வேன். அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கும்போதும் கண்டிப்பாக சொல்வேன் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

 கதிா்காமம் தில்லையாடி வள்ளியம்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாமை  தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி.

கதிா்காமம் தில்லையாடி வள்ளியம்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.