‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

பொன்னமராவதி வட்டாரத்தில் 103 மையங்களில் 7 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்

News image

போலியோ சொட்டு மருந்து முகாம் - கோப்புப்படம்

Updated On :29 ஜூன் 2026, 2:11 am IST

பொன்னமராவதி நகராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற முகாமை நகராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தொடங்கிவைத்தாா்.

மருத்துவா் ரம்யா தலைமையிலான மருத்துவக் குழுவினா் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினா். பொன்னமராவதி தற்காலிக பேருந்து நிலையத்தில் பொன். புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஆறு. சுதாகரன் தலைமை வகித்தாா்.

பொன்னமராவதி வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் காரையூா், மேலைச்சிவபுரி, அம்மன்குறிச்சி, நகரப்பட்டி, கொப்பனாபட்டி, மேலத்தானியம் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 103 மையங்களில் உள்ள 7ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.