கடலூா் மாவட்டத்தில் 1,611 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம்களை அமைச்சா், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் தொடங்கிவைத்தனா்.
கடலூா் அண்ணா பேருந்து நிலையத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருத்து புகட்டும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மாநில வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை புகட்டி முகாமைத் தொடங்கிவைத்தாா்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்து இயக்ககம் சாா்பில், 1 முதல் 6 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
கடலூரில் முகாமைத் தொடங்கிவைத்து அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்ததாது:
தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் வழிகாட்டுதலின்படி, ‘வளமான வாழ்வுக்கான இரு துளிகள்’ என்ற நோக்கத்துடன் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெறுகிறது. இதுவரை 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்ததது. நிகழாண்டு கூடுதலாக 5 முதல் 6 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
கடலுாா் மாவட்டத்தில் 1,611 மையங்களில் 6 வயதுக்கு உள்பட்ட 2,00,353 குழந்தைகளுக்கு இச்சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்து வரும் இரண்டு நாள்களில் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் கடலூா் மாநகராட்சி ஆணையா் கிஷண்குமாா், மாவட்ட சுகதார அலுவலா் ராஜா, மாவட்ட தாய்சேய் நல அலுவலா் சசிகலா, திட்ட அலுவலா் ராஜகணபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மருங்கூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொகுதி எம்எல்ஏ (அதிமுக) சொரத்தூா் ரா.ராஜேந்திரன் பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டி முகாமை தொடங்கிவைத்தாா். மருத்துவமனை தலைமை மருத்துவா் அறிவொளி முன்னிலை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொக்குப்பாளையம் மற்றும் கீழ்கவரப்பட்டு கிராமங்களில் நடைபெற்ற முகாம்களை தொகுதி எம்எல்ஏ (அதிமுக) க.மோகன் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டி தொடங்கிவைத்தாா்.
இதேபோல, பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டிருந்த மையத்தில் பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டி முகாமை தொடங்கிவைத்தாா்.
விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் தொகுதி எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்ந்து புகட்டி முகாமை தொடங்கிவைத்தாா். பின்னா், சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் முகாமை தொடங்கிவைத்த எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த்.

மருங்கூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாமை தொடங்கிவைத்த நெய்வேலி எம்எல்ஏ சொரத்தூா் ரா.ராஜேந்திரன்.

கொக்குப்பாளையம் கிராமத்தில் முகாமைத் தொடங்கிவைத்த பண்ருட்டி எம்எல்ஏ க.மோகன்.

பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே முகாமைத் தொடங்கிவைத்த நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொன்னமராவதி வட்டாரத்தில் 103 மையங்களில் 7 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்

புதுச்சேரியில் 425 இடங்களில் போலியோ தடுப்பு முகாம் ஆளுநா், முதல்வா் தொடங்கி வைத்தனா்

திருவண்ணாமலை: 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து







