தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

ராசிபுரத்தில் 21 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்

News image

போலியோ சொட்டு மருந்து முகாம் - கோப்புப்படம்

Updated On :28 ஜூன் 2026, 11:57 pm IST

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் 21 மையங்களில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

ராசிபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் பங்கேற்று, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கிவைத்தாா். இதில் வட்டார மருத்துவா் அலுவலா் கே.செல்வி, மருத்துவா் பிரதீபா, ஆய்வாளா் ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் ஆண்டகளூா் கேட் பகுதியில் நடைபெற்ற முகாமில் ரோட்டரி சங்கத் தலைவா் இ.என்.சுரேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கினா். இதில் 120 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதேபோல ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலா் கலைச்செல்வி, ஓய்வு பெற்ற மருந்தாளுநா் ஏ.ராஜு உள்ளிட்டோா் பங்கேற்று சொட்டு மருந்து வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.