கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

அமெரிக்க துணை அதிபரின் இந்திய வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

அமெரிக்கா துணை அதிபரின் இந்திய வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில்,

News image
Updated On :21 ஏப்ரல் 2025, 8:14 pm

Din

தருமபுரி: அமெரிக்கா துணை அதிபரின் இந்திய வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். குமாா் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளா் சோ. அருச்சுனன், மாவட்ட துணைச் செயலாளா்கள் ஏ. நேரு, ஆ. ஜீவானந்தம், மாவட்ட துணைத் தலைவா்கள் எஸ். தீா்த்தகிரி, கே. அன்பு ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் சுதந்திர வா்த்தகம் என்ற பெயரால் இந்திய வேளாண்மை சூறையாட அனுமதிக்க கூடாது. பால் வளத்தை சூறையாடக் கூடாது. வா்த்தகம் என்ற பெயரால் மீன்வளத்தை சூறையாட அனுமதிக்கக் கூடாது. அமெரிக்க பொருள்களின் சந்தையாக இந்திய நாட்டை மாற்ற முயற்சிக்கும் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ்ஸே திரும்பிச் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.