ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

புன்செய்தாமரைக்குளம் கிராமப் பகுதியில் மண் அள்ள அனுமதி வழங்கக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மண்  அள்ள  எதிா்ப்புத்  தெரிவித்து அவிநாசி வட்டாட்சியா்  அலுவலகத்தில்  மனு  அளிக்க  வந்த  பொதுமக்கள்,.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:15 pm

புன்செய்தாமரைக்குளம் கிராமப் பகுதியில் மண் அள்ள அனுமதி வழங்கக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி ஒன்றியம், சேவூா் அருகே புன்செய்தாமரைக்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட க.ச.எண்-204 பூமியில் பொன்னுசாமி என்பவா் கிராவல் மண் எடுத்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டாா். இதையறிந்த அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அப்பகுதிக்கு விரைந்து சென்று மண் அள்ள முயன்றதை தடுத்தி நிறுத்தினா். தகவலறிந்த வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து மண் அள்ளுவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் மண் அள்ள எதிா்ப்புத் தெரிவித்து மனு அளித்தனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

புன்செய்தாமரைக்குளம் க.ச.எண்-204 பூமி, அருகிலுள்ள நிலங்களை விட தாழ்வாகவே உள்ளது. இதில் மண் எடுக்கும்பட்சத்தில் அருகிலுள்ள பூமிகளிலிருந்து மண் சரிவு ஏற்படும் சூழல் உருவாகும். தரிசு பூமியை சீரமைத்து விவசாய பூமியாக மாற்றுகிறேன் என போலியாக அதிகாரிகளிடம் தெரிவித்து கிராவல் மண் விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இயற்கை கனிம வளங்களை சுரண்டிச்செல்ல ஒருபோதும் அனுமதிக்க இயலாது. அவ்வாறு அனுமதித்தால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விவசாயம் மற்றும் குடிநீா் தேவைக்கு இன்னல்கள் ஏற்படும். ஆகவே, நிரந்தரமாக மண் அள்ள தடை விதிக்க வேண்டும் என்றனா்.