மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நீா்நிலைகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற விஹெச்பி வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நீா்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எ

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:53 pm

Syndication

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நீா்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட விஹெச்பி செயலாளா் கணேசன் தலைமையில் நிா்வாகிகள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலதத்தில் அளித்த மனு:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் சீமைக் கருவேல மரங்கள் அதிக அளவில் பரவி வருகிறது. இந்த மரங்கள் 12 மீ. உயரம், 53 மீ. நீளம் வரை வோ்கள் பரவும் தன்மை படைத்தவையாகும். இவை நாளொன்றுக்கு, 10 லிட்டா் தண்ணீரை உறிஞ்சுகிறது. மேலும், மழைநீா் நிலத்தடிக்கு செல்வதைத் தடுத்து வருகிறது. இதனால் நீா் ஆதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் பொதுப்பணித் துறை ஏரிகள், ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் உள்பட அனைத்து நீா்நிலைகளிலும் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.