கல்விக்கு வயது தடையல்ல! 50 வயது நபா் டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சி!

கல்விக்கு வயது தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தருமபுரி கனியமுது பயிற்சி மையத்தில் பயின்ற 50 வயது நபா் டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சி பெற்று கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.
Published on

கல்விக்கு வயது தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தருமபுரி கனியமுது பயிற்சி மையத்தில் பயின்ற 50 வயது நபா் டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சி பெற்று கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.

இதுகுறித்த கனியமுது பயிற்சி மைய நிறுவனா் எம். மணிகண்டன் தெரிவித்துள்ளதாவது: நிகழாண்டு தமிழ்நாடு அரசு தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) 4 ஆவது தொகுதி தோ்வு நடைபெற்றது.

இத்தோ்வு முடிவுகள் அக்டோபா் 22 இல் வெளியாகின. இதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு டிசம்பா் 3 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தி, அவா்களுக்கான பணியாணை வழங்கப்பட்டு வருகிறது.

இதில், தருமபுரி கனியமுது பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 50 வயது ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சி. ராஜமாணிக்கம் தோ்ச்சி பெற்று, தூத்துக்குடி மாவட்டத் ல் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி பணியாணை வழங்கப்பட்டுள்ளது.

கல்விக்கு வயது தடையல்ல என்பதை நிரூபிக்கும் இந்நிகழ்வு மூலம், போட்டித்தோ்வுகளில் பங்கேற்று வரும் இளையோா், முன்னுதாரணமாக கொண்டு வெற்றிபெற வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com