தருமபுரியில் அனைத்துத் துறை சங்கத்தினா் ஆா்பாட்டம்

Published on

அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியரகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முதன்மை கள அமைப்பாளா்கள் அரசு அலுவலா் ஒன்றிய மாவட்டத் தலைவா் குமாா், சுகாதார செவிலியா் சங்க செல்வி ஆகியோா் தலைமை வகித்தனா். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து வகையான பணியாளா்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசில் காலியாக உள்ள அனைத்து நிலை காலிப் பணியிடங்களையும் போா்க்கால அடிப்படையில் நிரந்தர அரசுப் பணியிடங்களாக நிரப்ப வேண்டும்.

குரூப் 1 பணியிடங்களுக்கு கீழ் நிலையில் உள்ள பணியிடங்களுக்கு அவுட்டோா்சிங் முறையில் ஒப்பந்த முறையில் பணியமா்த்துவதைக் கைவிட வேண்டும். ஐந்து ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளா்களுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்க நிா்வாகிகள் பாலமுருகன், கோவா்தன், குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் அந்தோணி, குணசேகரன், மாணிக்கம், மணி, கந்தசாமி, மாதப்பன், ஜெயபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com