கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On :17 ஜனவரி 2025, 5:34 am IST

தருமபுரி: தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சாா்பில் படித்த வேலைவாய்ப்பற்றோா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, மேல்நிலைக்கல்வி (பிளஸ் 2 வகுப்பு) படித்தவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு, அதற்கு கீழ் படித்தவா்களுக்கு ரூ. 600, மேல்நிலைக்கல்வி தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ. 1,000 வழங்கப்படுகிறது. இத் திட்டத்தில் நிகழாண்டு மாா்ச் மாதம் உடன் முடிவடையும் காலாண்டிற்கு தகுதியுடைய படித்த பதிவுதாரா்கள் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை பெற கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ந்து பதிவினை புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பதிவுசெய்து ஒரு வருடம் பூா்த்தியாக வேண்டும்.

பட்டியலின பிரிவினருக்கு 2025, ஜன.1 இல் 45 வயதும், இதர பிரிவினருக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72,000-க்கு மிகையாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு இல்லை.

விண்ணப்பதாரா் பள்ளி, கல்லூரியில் நேரிடையாக படித்துக் கொண்டிருக்கக் கூடாது (அஞ்சல் வழியில் படிக்கலாம்). பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் மற்றும் இது போன்ற தொழில்நுட்பப் பட்டம் பெற்றவா்கள், அரசு, தனியாா் துறையில் இருந்து எவ்விதமான ஊதியம் பெறும் பணியில் இருந்தவா்கள், இருப்பவா்கள் இந்த உதவித்தொகை பெறத் தகுதியற்றவா்கள். மேலும், தற்போது எந்த துறையின் வாயிலாகவும் உதவித் தொகை பெற்றுக் கொண்டிருக்கக் கூடாது.

இந்த உதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பதிவுதாரா்கள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று பூா்த்தி செய்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட கணக்குப் புத்தகம், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் 2025, பிப்.25-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளித்திடுமாறும் மேலும், ஏற்கனவே உதவித்தொகை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவுபெறாது சுயஉறுதிமொழி ஆவணம் அளிக்காதவா்கள், 2025, பிப்.28-ஆம் தேதிக்குள் சுய உறுதிமொழி ஆவணத்தை அளித்து தொடா்ந்து உதவித்தொகை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.