பெரியார் அறிவுலக ஊழல்: பபாசி நிர்வாகிகளுடன் ராஜ்மோகன் ஆலோசனை!இதுவரை 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சிதீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா தவெக? டிடிவி தினகரன் கேள்வி!பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு: எழுத்தாளர்கள் கூட்டறிக்கை!பட்டாசு சப்தத்தைவிட பட்டா கத்திகளின் சப்தமே அதிகம்! உதயநிதி ஸ்டாலின்புற்றுநோய் மருந்துகள்! குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் அமல்!தண்ணீர் கேட்டவர் மீது தாக்குதல்! பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம்!தமிழ்நாட்டில் தீபாவளி அன்று 8 கொலைகள்!தேனியில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்தவர்களை கண்டித்த எஸ்.ஐ. படுகொலை!காற்று மாசு! சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!இஸ்ரேலில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் காடி ஐசென்கோட்!

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி!

பரிசலுக்கு அனுமதி; அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்

Updated On :

கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 20000 கன அடியாக சரிந்துள்ள நிலையில் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் படிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வந்தது. மழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.

இதனால் கர்நாடக மாநில அணைகள் வேகமாக நிரம்பிய நிலையில், அணைகளில் இருந்து சுமார் 90,000 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. உபரிநீர் வரத்தின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகபட்சமாக வினாடிக்கு 88,000 கன அடியாக இருந்தது.

நாளடைவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த பருவமழையின் தாக்கம் குறைந்தது. இதனால் கர்நாடக மாநில அணைகளுக்கு வரும் உபரிநீரின் வரத்து குறைந்து வந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்,சுற்றுலாப் பயணிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கும் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கன அடியாக சரிந்துள்ளதால், 22 நாட்களுக்குப் பிறகு காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் அனுமதி அளித்துள்ளார்.

தடை உத்தரவு நீக்கப்பட்ட நிலையில், வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையில் ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சின்னாறு பரிசல் துறையில் இருந்து கூட்டாறு வழியாக பிரதான அருவி மணல்மேடு வரை உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனர்.

மேலும் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Summary

Parisal allowed to operate in Hogenakkal Cauvery river

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.