புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

தருமபுரியில் புகையிலைப் பொருள்களை காரில் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தருமபுரியில் புகையிலைப் பொருள்களை காரில் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு, பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 63 கிலோ எடையிலான ரூ. 75,600 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை கடத்திவந்தது தெரியவந்தது.

இதையடுத்து காா் மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, காரில் வந்த தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சோ்ந்த பெருமாள் (32), ஸ்ரீகாந்த் (34) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com