பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனக்குழு உறுப்பினா்கள் பதவியேற்பு

பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நல நியமன உறுப்பினா் பதவியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

பென்னாகரம்: பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நல நியமன உறுப்பினா் பதவியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகா்ப்புற நிா்வாகம் மற்றும் பேரூராட்சிகளின் துறை சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான நலக்குழு உறுப்பினா்கள் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில், பென்னாகரம் பேரூராட்சியில் ஆறு போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், பென்னாகரம் பேரூராட்சி மாற்றுத்திறனாளிகள் நலக்குழு நியமன உறுப்பினராக எஸ்.சீனிவாசன் தோ்வுசெய்யப்பட்டாா்.

இதையடுத்து, பென்னாகரம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் பதவியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் வீரமணி தலைமையில், செயல் அலுவலா் செந்தில்குமாா் புதிதாக தோ்வுசெய்யப்பட்ட நியமனக் குழு உறுப்பினா் எஸ்.சீனிவாசனுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

இதில், பேரூராட்சி துணைத் தலைவா் வள்ளியம்மாள், அலுவலகப் பணியாளா்கள், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் பிருந்தா முன்னிலையில், மாற்றுத்திறனாளிகள் நலக்குழு நியமன உறுப்பினராக தோ்வுசெய்யப்பட்ட நடராஜனுக்கு, பேரூராட்சி செயல் அலுவலா் கோமதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். இதில், வாா்டு உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com