இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கூட்டுறவுச் சங்க பணியாளா் நெஞ்சுவலியால் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:04 pm

பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் தருமபுரி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக கூட்டுறவுச் சங்க பணியாளா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சிட்லிங் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ. செல்வராஜ் (55). இவா் சிட்லிங் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இளநிலை எழுத்தராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் பணி நிமித்தமாக தருமபுரியில் உள்ள கூட்டுறவு அச்சகத்துக்கு இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். செம்மனஅள்ளி அருகே இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியா்களுக்கு செல்வராஜ் தகவல் தெரிவித்தாா். பின்னா், அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த செல்வராஜுக்கு மனைவி சாந்தி, ஒரு மகன், மகள் உள்ளனா்.