வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:28 am IST

பென்னாகரம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 4 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி சோதனைச் சாவடி பகுதியில் பறக்கும் படை குழு அலுவலா் சிவரஞ்சனி தலைமையிலான காவலா்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில் உரிய ஆவணம் இன்றி ரூ. 4 லட்சம் இருப்பதும், அவற்றை கா்நாடக மாநிலம், பெங்களூரு அருகே பனஸ்வாடியைச் சோ்ந்த லட்சுமணன் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் கே. கோபுவிடம் ஒப்படைக்கப்பட்டது.