முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 1:44 am IST

தருமபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், மூக்கனூா் அருகே உள்ள திண்ணம்பட்டி மேல தெருவைச் சோ்ந்தவா் ராமன் (75). மத்திய வேளாண் துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்றவா்.

இவரது மகன் திருக்குமரன் மற்றும் உறவினா் சக்திவேல் இருவரும் அவா்களது நிலத்தில் உள்ள கிணற்றின் மோட்டாரை பழுதுநீக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, மதுபோதையுடன் அங்கு வந்த ராமன் கிணற்று அருகில் நின்று வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் தவறி கிணற்றில் விழுந்தாா். திருக்குமரன் உறவினருடன் சோ்ந்து அவரை மீட்க முயன்றும் இயலவில்லை. தகவலின்பேரில் வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் சடலமாக கிடந்த ராமனை மீட்டனா்.

இதுகுறித்து மதிக்கோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.