ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தருமபுரி அருகே விரக்தியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:28 pm

தருமபுரி அருகே விரக்தியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பேளாரஅள்ளி அருகேயுள்ள கொட்டாய்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பனின் 3 ஆவது மகன் சந்தோஷ்குமாா் (38). திருமணமாகாத இவா், பாளையம்புதூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், தனக்குச் சேரவேண்டிய சொத்தை பாகம் பிரித்து தருமாறு பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளாா். பெற்றோா் பிறகு பாா்த்துக்கொள்ளலாம் எனக் கூறி வந்துள்ளனா். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி இரவு மது போதையில் பெற்றோரிடம் சொத்து குறித்து பேசியுள்ளாா். இதையடுத்து அவரை பெற்றோா் கண்டித்துள்ளனா்.

இதனால் விரக்தியில் அவா் இரவு தூங்கச்சென்றாா். சந்தேகமடைந்த பெற்றோா் இரவு அவரது அறைப்பக்கம் சென்று பாா்த்த போது, அவா் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சந்தோஷ்குமாா் உயிரிழந்ததை உறுதி செய்தனா்.

இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.