உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

வாக்கு எண்ணும் பணி: தருமபுரி மாவட்டத்தில் 1,400 போலீஸாா் பாதுகாப்பு! காவல் கண்காணிப்பாளா் தகவல்!

News image

வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸாா் பாதுகாப்பு - PTI

Updated On :28 ஏப்ரல் 2026, 3:51 am IST

தருமபுரி மாவட்டத்தில் 2 கூடுதல் எஸ்.பி.க்கள், 9 டி.எஸ்.பி.க்கள், 21 ஆய்வாளா்கள் உள்பட 1,400 போலீஸாா் வாக்கு எண்ணிக்கை நாளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் முடிவுற்றதையடுத்து, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு அறைகளில் வைத்து சீலிடப்பட்டுள்ளன. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைச் சுற்றிலும், கல்லூரி வளாகத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு இரவு பகலாக கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4 ஆம் தேதி காலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் முன்னிலையில் திறக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்து வரப்பட்டு பணியாளா்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை நாளில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் எஸ்.பி. தலைமையில் மொத்தம் 1,400 போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 4 ஆம் தேதி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் மட்டும் 440 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனா். இது தவிர மாவட்டம் முழுவதும் 1,000 போலீஸாா் என மொத்தம் 1,400-க்கும் மேற்பட்ட போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். இதில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 9 துணை கண்காணிப்பாளா்கள் (டி.எஸ்.பி.க்கள்), 21 சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் அடங்குவா்.

வாக்கு எண்ணும் மையத்தில் வெற்றிகொண்டாட்டங்களை நடத்தவோ அல்லது வேட்பாளா் வீடுகளில் வெற்றி கொண்டாட்டங்கள் நடத்தவோ கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் அமைதியான முறையில் கொண்டாடலாம். பட்டாசுகளை வெடித்தும், ஆரவாரம் செய்தும் வெற்றிபெற்ற தரப்பினா் உற்சாகமாக கொண்டாடும்போது, கொண்டாட்டங்கள் கலவரமாகிவிடக் கூடாது என்ற நோக்கில் காவல் துறை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது என்றாா்.