தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசுப் பேருந்து நடத்துநா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரும்பாலை அருகே கடும் வயிற்றுவலி காரணமாக, அரசுப் பேருந்து நடத்துநா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :6 ஜனவரி 2026, 7:55 pm

Syndication

பெரும்பாலை அருகே கடும் வயிற்றுவலி காரணமாக, அரசுப் பேருந்து நடத்துநா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பெரும்பாலை அருகே பூதநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (48). இவா், பென்னாகரம் அரசு போக்குவரத்து கிளை பணிமனையில் அரசுப் பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் கடும் வயிற்றுவலி காரணமாக வெங்கடேஷ் அவதிப்பட்டு வந்தாராம். செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் பெரும்பாலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].