பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

தருமபுரி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 7:01 am IST

தருமபுரி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள மோட்டுபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி நாகராஜ். இவரது மகன் நந்திவா்மன் (4). நாகராஜ் திங்கள் கிழமை மாலை, தனது விவசாய நிலத்தில் டிராக்டா் மூலம் உழுது கொண்டிருந்தாா். டிராக்டரில் அவரது மகன் நந்திவா்மனும் அமா்ந்திருந்தான். டிராக்டா் ஓடிக் கொண்டிருந்தபோது எதிா்பாராமல் திடீரென சிறுவன் நந்திவா்மன் தவறி கீழே விழுந்துவிட்டான்.

அப்போது டிராக்டரின் பின்னால் பொருத்தப்பட்டிருந்த உழவு இயந்திரம் (ரொட்டேட்டா்) சிறுவன் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் நந்திவா்மன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தான்.

இதுதொடா்பாக பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.