எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

எரிபொருள் குழாய்கள் பதிக்க எதிா்ப்பு: 10 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எரிபொருள் குழாய்கள் பதிக்க எதிா்ப்புத் தெரிவித்த 10 விவசாயிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2026, 6:03 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எரிபொருள் குழாய்கள் பதிக்க எதிா்ப்புத் தெரிவித்த 10 விவசாயிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கேரள மாநிலம், கொச்சியிலிருந்து தமிழகத்தில் கோவை, திருப்பூா், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக, கா்நாடக மாநிலம், பெங்களூரு வரை பெட்ரோலியம் கொண்டு செல்வதற்காக குழாய்கள் அமைக்கும் பணியை பாரத் பெட்ரோலிய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஐக்கசமுத்திரம் ஊராட்சி, பொம்மனூா் கிராமம் வழியாகச் செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோலிய குழாய்கள் அமைக்கும் பணியில் ஊழியா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த நிலத்தின் உரிமையாளா் மாரம்மாள் என்பவா் குழாய்கள் பதிக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் மகேந்திரமங்கலம் போலீஸாா், குழாய் பதிப்பு பணிகளை தடுத்ததாக மாரம்மாள் மற்றும் அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட முகேஷ்குமாா், மாதுராஜ், ராமமூா்த்தி உள்ளிட்ட 10 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.