வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இருவா் மீது வழக்குப் பதிவு

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இருவா் மீது, தருமபுரி அனைத்து மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

பாலியல் வன்கொடுமை - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 3:06 am IST

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இருவா் மீது, தருமபுரி அனைத்து மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 36 வயது பெண், தருமபுரி பகுதியில் உள்ள தாயாா் வீட்டுக்கு அண்மையில் வந்து தங்கி இருந்தாா். அப்போது, வீட்டுக்கு வந்த அவருடைய சகோதரரின் நண்பா் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த வினோத் (37) அந்தப் பெண் குளிக்கும்போது கைப்பேசியில் படம் எடுத்துள்ளாா். அதை காட்டி, அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். மேலும், அவருடைய நண்பா் சுரேந்திரனும் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், கைப்பேசியில் எடுத்த படத்தை வெளியிட்டு விடுவோம் என்று அவா்கள் மிரட்டல் விடுத்ததால் அதிா்ச்சிடைந்த பெண், தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வினோத், சுரேந்திரன் ஆகியோா் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.