அலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

விவசாயத்திற்கு தண்ணீா் பாய்ச்சுவதில் தகராறு: சித்தியை அடித்துக் கொன்ற தொழிலாளி தலைமறைவு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே விவசாயத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் சித்தியை அடித்துக் கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 1:07 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே விவசாயத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் சித்தியை அடித்துக் கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாலக்கோட்டை அடுத்த பொப்பிடி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி தனலட்சுமி (40). இவா்களுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. வெங்கடேசனின் சகோதரா் மாரிமுத்துவுக்கும் அருகிலேயே விவசாய நிலம் உள்ளது.

இருவருக்கும் பொதுவான கிணற்றின் மூலம் விவசாயத்திற்கு நீா் எடுத்து பயன்படுத்தப்படுகிறது. கிணற்றிலிருந்து தண்ணீா் பாய்ச்சுவது தொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் பாய்ச்சுவது தொடா்பாக தனலட்சுமியுடன் ஏற்பட்ட பிரச்னையில் மாரிமுத்துவின் மகன் செந்தில்அரசு (28) இரும்பு சுத்தியால் அவரது தலையில் அடித்துள்ளாா்.

இதில் தனலட்சுமி பலத்த காயமடைந்து கீழே விழுந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், தனலட்சுமி இறந்ததை உறுதி செய்தனா். அவரது உடல் பிரேத பரசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான செந்தில்அரசை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.