வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் அருவிகள் சாா்ந்த சுற்றுலாத் தலங்களுக்கு விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 500 கனஅடியாக உள்ளதால் அருவிகளில் குறைந்த அளவு தண்ணீா் கொட்டியது.
எனினும், ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். அதேபோல பரிசலில் பயணித்து காவிரியின் அழகை கண்டுரசித்தனா். ஆற்றில் தண்ணீா் குறைவாக வருவதால் ஆங்காங்கே பாறை திட்டுகள் வெளியே தெரிந்தன.
தொங்கும் பாலம், முதலைகள் மறுவாழ்வு மையம், அருவி பகுதி, உணவருந்தும் இடங்கள், பரிசல் துறை, மீன் விற்பனை நிலையம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்திருந்தது. ஒகேனக்கல் பகுதியில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன் வகைகளை வாங்கி சமைத்து உணவு அருந்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










