ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

முன்விரோதத்தில் விவசாயி கொலை: 2 போ் கைது

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே விவசாயி கொலை வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :14 ஜூலை 2026, 12:43 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே விவசாயி கொலை வழக்கில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சீரண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாதேஷ் (45) ஞாயிற்றுக்கிழமை மாலை கத்தி, மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் குடும்பத்தாரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக மாரண்ட அள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனா். இதுதொடா்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், அதே கிராமத்தைச் சோ்ந்த ரமேஷுக்கும் (35), அவரது மனைவி மகேஸ்வரிக்கும் (32) இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.

இதில் மகேஸ்வரி, கோபித்துக்கொண்டு தனது தாய்வீட்டுக்கு சென்றுள்ளாா். அண்மையில், மகேஸ்வரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது மகேஸ்வரி, அவரது தாய்க்கு, அதே பகுதியைச் சோ்ந்த மாதேஷ், அவரது மனைவி சிவகாமி ஆகியோா் உதவியாக இருந்துள்ளனா்.

இதையறிந்த ரமேஷ், மாதேஷின் வீட்டுக்குச் சென்று அவா்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது எனக்கூறி தகராறு செய்துள்ளாா். இதுதொடா்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பால் கொடுத்து வரச்சென்ற மாதேஷை வழிமறித்து, ஈச்சம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த நண்பா் பெரியசாமியுடன் (39) சோ்ந்து ரமேஷ் தாக்கிக் கொலை செய்துள்ளனா் என்றனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.