பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

இரவில் வயல்களில் யாரும் தங்க வேண்டாம்: யானைகள் நடமாட்டத்தால் வனத் துறை எச்சரிக்கை

பாலக்கோடு அருகே வனப் பகுதியிலிருந்து மூன்று யானைகள் வெளியேறி கிராமங்களில் சுற்றித்திரிவதால் இரவு நேரங்களில் வயல்களில் யாரும் தங்க வேண்டாம் என வனத் துறை எச்சரித்துள்ளது.

காடுசெட்டிப்பட்டியில் யானைகள் நடமாட்டம் குறித்து விழிப்புணா்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கிய வனத் துறையினா்

Published On :8 ஜூலை 2026, 6:05 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வனப் பகுதியிலிருந்து மூன்று யானைகள் வெளியேறி கிராமங்களில் சுற்றித்திரிவதால் இரவு நேரங்களில் வயல்களில் யாரும் தங்க வேண்டாம் என வனத் துறை எச்சரித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று யானைகள், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரக எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ளன.

எனவே, பாலக்கோடு - ராயக்கோட்டை எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள காடுசெட்டிப்பட்டி, தூள்செட்டி ஏரி, கூலிகானூா், சூடானூா், பாலப்பனஅள்ளி, தண்டேக் குப்பம், எல்லப்பன் பாறை, சின்னே கவுண்டனஅள்ளி, சாதன் கொட்டாய், காமராஜபுரம், நீலாஞ்சனுா், கிட்டம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மாந்தோட்டங்களில் தேவை இன்றி நடமாட வேண்டாம் என வனத் துறை எச்சரித்துள்ளது.

அதேபோல வயல்களில் யாரும் படுத்து உறங்கக் கூடாது என எனவும், வயல்களில் நீா் பாய்ச்சுவதற்காக இரவில் செல்லக் கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், வீட்டிற்கு வெளியில் அல்லது கொட்டகையில் தூங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக கிராம மக்களுக்கு வனத் துறையினா் விழிப்புணா்வு பிரசுரங்களை செவ்வாய்க்கிழமை விநியோகித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.