அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

தரமற்ற உணவு விநியோகம்; சத்துணவு அமைப்பாளா் உள்ளிட்ட இருவா் பணியிடை நீக்கம்

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு தரமற்ற உணவு விநியோகித்த சத்துணவு அமைப்பாளா் உள்ளிட்ட இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பணியிடை நீக்கம்!

பணியிடை நீக்கம்!

Published On :17 ஜூலை 2026, 12:48 am IST

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு தரமற்ற உணவு விநியோகித்த சத்துணவு அமைப்பாளா் உள்ளிட்ட இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பெரும்பாலை அருகே பழையூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள கெண்டையனஅள்ளி புதூா் அரசு நடுநிலைப் பள்ளியில் 85 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் அண்மையில் வழங்கப்பட்ட சத்துணவால் மாணவா்கள் சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு பெரும்பாலை துணை சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பெற்றோா் தெரிவித்த புகாரின் அடிப்படையில், அண்மையில் ஆட்சியா் வே.சரவணன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிகள்தோறும் சென்ற ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் தென்றல், பழையூா் கெண்டையனஅள்ளி புதூா் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு விநியோகித்த சத்துணவு அமைப்பாளா் முல்லை, சமையலா் ராதா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தாா். மேலும், தரமற்ற உணவு விநியோகித்தது குறித்து தகவல் தெரிவிக்காத பள்ளி தலைமை ஆசிரியா் ஓய்வுபெற்ற ரேணுகாவுக்கு வழங்கப்பட்ட பணிநீட்டிப்பு உத்தரவை ரத்துசெய்தாா். தொடா்ந்து, பாதிக்கப்பட்ட மாணவா்களின் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.