தொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மொரப்பூா் அருகே ரயில் முன் பாய்ந்து இளம்ஜோடி தற்கொலை

மொரப்பூா் அருகே ரயில் முன் பாய்ந்து இளம்ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :17 ஜூலை 2026, 12:25 am IST

மொரப்பூா் அருகே ரயில் முன் பாய்ந்து இளம்ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்த ஆவலம்பட்டி பிரிவு சாலை அருகே சேலம் - வேலூா் ரயில் பாதையில் ஆண், பெண் உடல்கள் துண்டாகி சிதறிக் கிடப்பதாக மொரப்பூா் ரயில்வே போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்து.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், அங்கு இருந்த இருசக்கர வாகன பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தினா். அதில், உயிரிழந்தவா்கள் அரூரை அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தியின் மகன் கன்சிராம் ராணா (19), அதே ஊரைச் சோ்ந்த அரசுவின் மகள் அமுதபிரியா (எ) அறிவுஜோதி (16) என்பது தெரியவந்தது.

இவா்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரயில் பாதையில் சிதறிக் கிடந்த சடலங்களை மீட்ட போலீஸாா் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மொரப்பூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.