மொரப்பூரில் ரயில் முன் பாய்ந்து இளம் காதல் ஜோடி வியாழக்கிழமை காலை தற்கொலை செய்துகொண்டனர்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே அரூரை அடுத்த எட்டிப்பட்டி அழகிரி நகரைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் கன்சிராம் (வயது 20). அதே பகுதியில் வசிக்கும் அரசு என்பவர் மகள் ஆசியஜோதி (18).
இவர்கள் இருவரும் மொரப்பூர் அருகே சேலம் - வேலூர் ரயில்வே தண்டவாளத்தில், அந்த வழியாக வந்த ரயில் முன்பு பாய்ந்து வியாழக்கிழமை காலை தற்கொலை செய்துகொண்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இளம் ஜோடிகளின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
Summary
Young couple commits suicide by jumping in front of a train in Morappur!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










