தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரயில்! ஜூலை 17 சேவை தொடங்குகிறது! எங்கே?

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தொடக்கவிழா பற்றி...

News image

ஹைட்ரஜன் ரயில்

Updated On :15 ஜூலை 2026, 2:15 pm IST

சென்னை, பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடக்கிவைக்கவுள்ளார்.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் தலா 10 பெட்டிகளைக் கொண்ட 35 ஹைட்ரஜன் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு சார்பில் ரூ. 2,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

கார்பனை உமிழ்வதுக்கு பதிலாக தண்ணீரை மட்டுமே வெளியிடும், ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் ரயில்கள், உலகளவில் ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் மட்டுமே உள்ளன.

இந்த நிலையில், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலம் மூலம் இயங்கும் 10 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் ஹரியாணா மாநிலத்தின் ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

1200 கிலோவாட் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிசை அமைப்பின் மூலம் இயக்கப்பட்டு, மணிக்கு அதிகபட்சமாக 75 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலின் சேவையை வருகின்ற ஜூலை 17 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைக்கவுள்ளார்.

Summary

The first hydrogen train manufactured in Chennai! Service begins on July 17! Where?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.