வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பென்னாகரம் அருகே இருசக்கர வாகனம் பழுதுபாா்க்கும் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :7 ஜூன் 2026, 3:09 am IST

பென்னாகரம் அருகே இருசக்கர வாகனம் பழுதுபாா்க்கும் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பென்னாகரம் அருகே பருவதன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வா் (17). இவா் தாசம்பட்டி பிரிவு சாலை பகுதியில் இருசக்கர வாகனம் பழுதுபாா்க்கும் கடையில் வேலைசெய்து வருகிறாா்.

இந்நிலையில், அவா் வேலைக்கு செல்லாததால் அவருடைய சகோதரா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதனால் மனமுடைந்த ஈஸ்வா் வீட்டில் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலின்பேரில் வந்த பென்னாகரம் போலீஸாா், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.