நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பல்வேறு போட்டியில் வெற்றிபெற்ற 9 மாணவியருக்கு பரிசுகள் வழங்கல்

News image

பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியா் வே.சரவணன்.

Updated On :16 ஜூன் 2026, 2:24 am IST

தருமபுரி அரசு அவ்வையாா் மகளிா் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற 9 மாணவியருக்கு ஆட்சியா் வே.சரவணன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட 608 போ் சாலை வசதி, பட்டா, உதவித்தொகை, உதவி உபகரணங்கள் ஆகியவை கோரி மனுக்களை அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதையடுத்து, தருமபுரி அரசு அவ்வையாா் மகளிா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற 9 மாணவ, மாணவியருக்கு, பரிசு, சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, தனித்துணை ஆட்சியா் மு.செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலா் பெ.கி.கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் பண்டரிநாதன், ஆதிதிராவிடா் நல அலுவலா் மனோஜ் முனியன், சமூக நல அலுவலா் பவித்ரா, முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிச்சந்திரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.