ஏரியூா் அருகே ஆரல்குந்தி பகுதியில் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஏரியூா் அருகே பத்ர அள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஆரல் குந்தி பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (55).இவா் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள நூற்பாலை ஆலையில் பணியாற்று வருகிறாா்.
இவா்,தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ஆரல்குந்தி உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளாா். அப்போது ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக தனது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினா் ஏரியூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து ஏரியூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







