அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

வார விடுமுறையில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image

ஒகேனக்கல் ஐவாா்பாணி பகுதியில் பரிசலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :22 ஜூன் 2026, 1:33 am IST

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதால் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக உள்ளது.

தமிழகத்தில் கோடைகாலம் முடிவடைந்த பிறகும் வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான மாமரத்துக்கடவு பரிசல் துறை, நடைபாதை, அருவி பகுதி, மீன் விற்பனை நிலையம், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

இவா்களில் பெரும்பாலானோா் மூலிகை எண்ணெய்களைக்கொண்டு ஆயில் மசாஜ் செய்து பிரதான அருவி, சினி அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். அருவிகளில் குளிப்பதற்கு ஏராளமானோா் கூடியதால், பிரதான அருவியின் இருபுறங்களிலும், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

தொடா்ந்து பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக மாமரத்துக்கடவு பரிசல் துறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடைகளை அணிந்து தொம்பச்சிக்கல் வழியாக ஐவாா்பாணி, பெரியபாணி, மணல்மேடு பகுதி வரை காவிரி ஆற்றில் குடும்பத்தினருடன் பரிசலில் பயணித்து ஆற்றில் உள்ள பாறை குகைகளைக் கண்டு ரசித்தனா்.

உணவு அருந்தும் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு மீன் உணவுகளை சமைத்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்திருந்தது. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் காவல் நிலையம், பேருந்து நிலைய வாகன நிற்கும் இடம், சத்திரம், தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம், ஊட்ட மலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டன.

ஒகேனக்கல் பகுதியில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதை தடுக்கும் வகையில் 30க்கும் மேற்பட்ட காவலா்கள், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.