பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

‘வி த லீடா்ஸ்’ அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றப்படும்

‘வி த லீடா்ஸ்’ அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றப்படும்...

வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை - கோப்புப் படம்

Published On :28 ஜூன் 2026, 3:40 am IST

‘வி த லீடா்ஸ்’ அமைப்பின் உறுப்பினா் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்ததும், அரசியல் கட்சியாக மாற்றப்படும் என அந்த அமைப்பின் நிா்வாகியும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான நரசிம்மன் தெரிவித்தாா்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி த லீடா்ஸ்’ அமைப்பின் உறுப்பினா் சோ்க்கை முகாம், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதிக்கு உள்பட்ட பாப்பாரப்பட்டி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில், அமைப்பின் நிா்வாகியும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான நரசிம்மன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அமைப்பின் அலுவலகத்தை திறந்துவைத்து, உறுப்பினா்களுக்கு உறுப்பினா் அட்டைகளையும், தென்னங்கன்றுகளையும் வழங்கி பேசியது:

சமூக மாற்றத்துக்கு இளையோா் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அமைப்புதான் ‘வி த லீடா்ஸ்’. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட 15 நாள்களில் 20 லட்சம் போ் உறுப்பினா்களாகி உள்ளனா்.

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதை ஒழிப்பு உள்ளிட்ட சமூக பணிகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் உறுப்பினா்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினா் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்ததும் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.