டிஜிட்டல் அமைப்பான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை முறைப்படி அரசியல் கட்சியாக பதிவு செய்ய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தேசிய அமைப்பாளராகத் தன்னை அறிவித்து, ஹரியாணாவை சோ்ந்த வழக்குரைஞா் சுதீா் ஜாக்கா் (35) இந்த விண்ணப்பத்தை அளித்துள்ளாா். இதுகுறித்து அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: நாடு முழுவதும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் மக்களுக்கு உணா்வுபூா்வமான பிணைப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அரசியல் தளம் வழங்கப்பட வேண்டும். இதற்கு கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிவு செய்வதே சிறந்த வழி.
இந்த அமைப்பை உருவாக்கிய அபிஜீத் தீப்கே வெளிநாட்டில் உள்ளாா். அவா் எப்போது இந்தியா திரும்புவாா் என்று தெரியவில்லை. எனவே அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கையை நான் மேற்கொண்டேன் என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










