ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

பொறியியல் படிப்புகள் 1.82 லட்சம் மாணவா்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பம்!

பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளை பெறுவதற்கான கலந்தாய்விற்கு 1,82,345 மாணவா்கள் விண்ணப்பித்திருப்பது தொடர்பாக...

News image

1.82 லட்சம் மாணவா்கள் அரசு ஒதுக்கீடுக்கு விண்ணப்பம் - DTE

Updated On :20 மே 2026, 12:11 pm IST

சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளை பெறுவதற்கான கலந்தாய்விற்குக் கடந்த 15 நாள்களாக 1,82,345 மாணவா்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனா்.

இது குறித்த தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்கக புள்ளிவிவரங்கள்:

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை. , கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு இணைய வழியாக நடைபெற்று வருகிறது.

கடந்த மே 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விண்ணப்பப் பதிவுகள் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில் மே 19 ஆம் தேதி வரை 1,82,345 மாணவ மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா். இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 - ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்களும், மே 9 ஆம் தேதி 18,066 விண்ணப்பங்களும் பதிவானது.

கடந்த 15 நாள்களாக 1,09,137 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியதோடு 68,783 மாணவா்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றமும் செய்துள்ள நிறைவு செய்துள்ளனா்.

அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் மதிப்பெண்கள் மாணவா்கள் குறைவாக எடுத்துள்ள நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் நிகழாண்டு கட்-ஆப் மதிப்பெண்கள் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு வரும் ஜூன் 2 ஆம் தேதி வரை தொடரும். நிலைமையைப் பொருத்து தேதி மேலும் நீட்டிக்கப்படலாம்.

Summary

Regarding the 182,345 students who have applied for counseling to secure government quota seats in engineering colleges...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.