சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

பொறியியல் சோ்க்கை: 2.16 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு கடந்த 18 நாள்களில் 2,16,824 மாணவ, மாணவியா் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா்.

News image

விண்ணப்பம்

Updated On :21 மே 2026, 1:19 am IST

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு கடந்த 18 நாள்களில் 2,16,824 மாணவ, மாணவியா் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை. கல்லூரிகளில் பி.இ., பி.டெக் இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு இணைய வழியில் நடைபெற்று வருகிறது.

கடந்த மே 3- ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விண்ணப்பதிவு கடந்த 18 நாள்களாக நடைபெற்றுவருகிறது. இதில் மே 20 வரை 2,16,824 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா்.

இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 - ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்களும், மே 9 -ஆம் தேதி 18,066 விண்ணப்பங்களும் பதிவாகின. கடந்த 15 நாள்களாக 1,42,249 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியதோடு 99,921 மாணவா்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனா்.

பொறியியல் படிப்புகளுக்கு தேவையானஅறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் நிகழாண்டு மாணவா்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ள நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் நிகழாண்டு கட்-ஆப் மதிப்பெண்கள் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.