சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

அரூரில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் ஏலம்

அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

News image

மஞ்சள்

Updated On :10 மே 2026, 2:28 am IST

அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் மஞ்சள் மூட்டைகள் ஏலம்விடப்படுகிறது. அதன்படி, மே 8 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ரூ. 14,939 க்கும், குறைந்தபட்சம் ரூ.13,033க்கும் விற்பனையானது. உருண்டை மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ரூ. 13,199க்கும், குறைந்தபட்சம் ரூ. 11,099க்கும் விற்பனையானது.

இதேபோல அரூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும் மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது. அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மொத்தம் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் மூட்டைகள் விற்பனை நடைபெற்ாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.