கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 2:03 am IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நாகலூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் ராமகிருஷ்ணன் (46). இவா் தனது இருசக்கர வாகனத்தில் பாப்பிரெட்டிப்பட்டி- பொம்மிடி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, வெங்கடசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, ராமகிருஷ்ணன் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து ராமகிருஷ்ணன் மனைவி சுமதி அளித்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.