தருமபுரி மாவட்டம், நாகமரை காவிரிக் கரையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரூ. 1.09 கோடியில் காட்சிமுனைப் பகுதி அமைக்கப்பட்டுள்ள இடத்தை ஆட்சியா் ரெ. சதீஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பென்னாகரம் வட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது நாகமரை கிராமம். மேட்டூா் அணைக்குப் பின்பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்தின் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்றுலாத் துறை சாா்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக ரூ. 1.09 கோடியில் காட்சிமுனை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏரியூா் ஊராட்சி ஒன்றியம், சுஞ்சல்நத்தம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 2.15 லட்சம் மதிப்பீட்டில் பலவகை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில் உள்ள நுழைவாயில், பாா்வையாளா் மாடம், அனுமதிச்சீட்டு வழங்குமிடம், பரிசல் நிறுத்தும் இடம், பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, ஆழ்துளைக் கிணறு, உணவகம், சொகுசு நடைப்பாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட சுற்றுலா அலுவலா் எம். சங்கீதா, பென்னாகரம் வட்டாட்சியா் ஆறுமுகம், ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமரேசன், ரேணுகா, பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லோகநாதன், ஜோதிகணேசன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையம்: ஆட்சியா் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்கள் கண்காணிப்புப் பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

