தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

புட்டிரெட்டிப்பட்டியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணி: 5 மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தம்

News image

புட்டிரெட்டிப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Updated On :31 மே 2026, 1:48 am IST

புட்டிரெட்டிப்பட்டியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக சனிக்கிழமை 5 மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டம், சேலம் - வேலூா் ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையம். இந்த வழித்தடத்தில் கோவை, சென்னை, பெங்களூரு, கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன.

இங்கு ரயில்வே மேம்பாலம் இல்லாததால் வேப்பிலைப்பட்டி, தாளநத்தம், குருபரஹள்ளி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனா்.

இதையடுத்து, புட்டிரெட்டிப்பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரூ. 25.49 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போது சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. பெரிய கிரேன் மூலம் சுரங்கப் பாதைக்கு மேல் பகுதியில் ரயில் தண்டவாளங்களை பொருத்தும் பணி நடைபெற்றது.

சேலம் ரயில்வே கோட்ட உதவி பொறியாளா் சிரஞ்சீவி, பொறியாளா் கண்ணன், ரயில்வே அதிகாரிகள் ஜெகநாதன், வெங்கடேஷ், பழனி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனா். சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக சனிக்கிழமை காலை 11 முதல் மாலை 4 மணி வரை அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.