தேசிய பெண் கல்வித் திட்டம்: 25 ஆயிரம் மாணவிகள் பயன்

கிருஷ்ணகிரி, ஜன.8: தேசிய பெண் கல்வித் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25,154 மாணவிகள் பயனடைந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் வி.அருண் ராய் தெரிவித்தார். வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில், தேசிய பெண்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி, ஜன.8: தேசிய பெண் கல்வித் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25,154 மாணவிகள் பயனடைந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் வி.அருண் ராய் தெரிவித்தார்.

வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில், தேசிய பெண் கல்வித் திட்டத்தின் கீழ் 2010-2011-ம் கல்வியாண்டுக்கான சிறந்த பள்ளி மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியர் பேசியது: தேசிய பெண் கல்வி திட்டத்துக்கு ரூ.69.96 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் 26 தொகுப்புப் பள்ளிகள், சூளகிரியில் 44, கெலமங்கலத்தில் 40 என மொத்தம் 110 மாதிரி தொகுப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன.இங்கு, உடல் நலம், வாழ்வியல் திறன் மற்றும் தொழிற் பயிற்சி, ஆளுமை கல்வி, பெண் உரிமை முன்னேற்ற பயிற்சி உள்ளிட்டவைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் 25,154 மாணவிகள் பயனடைந்துள்ளனர் என்றார்.

செயல் வழிக்கற்றல், படைப்பாற்றல், சுற்றுப்புறத் தூய்மை, கலை மற்றும் விளையாட்டு ஈடுபாடு போன்றவற்றை சிறப்பாகச் செயல்படுத்திய 26 பள்ளிகளுக்கும், 26 ஆசிரியர்களுக்கும் கேடயம், சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார் (படம்).

அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் எம்.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com