தருமபுரி சந்தைப்பேட்டையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை குறுவள மைய ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தொடக்கி வைத்தார்.
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பது உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. சந்தைப்பேட்டை குறுவள மையத்தைச் சேர்ந்த 80 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்தப் பயிற்சியை வள மைய மேற்பார்வையாளர் சின்னமுத்து பார்வையிட்டார். ஆசிரியர் பயிற்றுநர்கள் வேல்முருகன், வனிதா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.